ஊருக்கை ஒருகதை - சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்

யாழ்ப்பாணத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் 'தீம்புனல்" வாரந்த பத்திரிகையில் 'ஊருக்கை ஒருகதை" எனும் தலைப்பில் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கும் ஊர்க்கதைகளில் 01.05.2021 அன்றைய நாளில் வெளியான 'சவம் காத்த சண்டியன் சண்முகத்தான்". சவம் காத்த சண்டியன் சண்முகத்தான் முந்தியெல்லாம் ஊருக்குள்ளை ஒரு செத்தவீடு நடந்தால் போதும் செத்தவீட்டு வேலைவெட்டியளைச் செய்யிறதுக்கு இளவட்டங்கள் முண்டியடித்து வந்து நிக்குங்கள். தோரணம் கட்டிறது துவக்கம் சவம் எரிக்கிறது வரைக்கும் எல்லா வேலையளையும் பொறுப்பெடுக்க இளம் பொடியள் வந்து நிற்பாங்கள். இண்டைக்கு அது குறைஞ்சுபோச்சுத்தான். அப்ப எண்டாலும் சரி இப்ப எண்டாலும் சரி அந்த வேலையளுக்குப் பின்னாலை ஒரு 'முசுப்பாத்தியும்" இருக்கெண்டு எனக்கும் தெரியும் உங்களுக்கும் தெரியும்தானே! இண்டைக்கு அந்த 'முசுப்பாத்தியள்" அளவுக்கு மிஞ்சிப்போச்சு. கோர்வை கோர்வையா வெடி கொழுத்திறது 'கேஸ்" கணக்கிலை சோடா உடைக்கிறது 'பாண்ட்" வாத்தியம் பிடிச்சு முழங்கித்தள்ளிறது எண்டு கனக்க இருக்கு. அதிலை தவிர்கேலாத ஒண்டுதான் சுடலைக்கு 'பரல்...